Home Blog இந்திய மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தேதி அறிவிப்பு

இந்திய மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தேதி அறிவிப்பு

0

Announcement of Application Registration Date for Indian Medical Courses

இந்திய மருத்துவ
படிப்புகளுக்கான விண்ணப்ப
பதிவு தேதி அறிவிப்பு

நடப்பு
கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு (D.I.P.) மற்றும் நர்சிங்
தெரபி பட்டயப்படிப்பு (D.N.T.) ஆகியவற்றுக்கான விண்ணப்பப் பதிவு நாளை
மறுநாள் (நவ.18) முதல்
தொடங்குகிறது.

12ஆம்
வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல்
பாடங்களை எடுத்து தேர்ச்சி
பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன என இந்திய
மருத்துவம் மற்றும் ஹோமியோபதி
இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்:

ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு (D.I.P.) மற்றும் நர்சிங்
தெரபி பட்டயப்படிப்பு (D.N.T.) பயில
விருப்பமுள்ள நபர்கள்
மேற்கண்ட படிப்புகளுக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல்
தொகுப்பினை 18.11.2021 முதல்
10.12.2021
முடிய மாலை 5.00 மணி
வரை மட்டும் www.tnhealth.tn.gov.in  இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும்,
விவரமான வலைதள அறிவிக்கை,
மேற்கண்ட படிப்புகளுக்கான தகவல்
தொகுப்பேடு, அரசு பள்ளிகளின் விவரம், விண்ணப்பப் பதிவிறக்கம் மற்றும் அதனின் கட்டணம்,
குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதிமுறைகள், படிப்புகளின் விவரம்,
சிறப்பு பிரிவினர், அடிப்படைத்தகுதி, கல்விக்கட்டணம் மற்றும்
பிற விவரங்களுக்கு இதே
வலைதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

இயக்குநர்,
இந்திய மருத்துவம் மற்றும்
ஒமியோபதித்துறை, சென்னை
– 600 106
என்ற முகவரிக்கு பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் தபால்/கொரியர்
சேவை வாயிலாக பெறவோ
அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள் 10.12.2021 மாலை
5.30
மணி வரை.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version