JEE
முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது
IIT
உள்ளிட்டவற்றில் சோக்கைக்கான ஒருங்கிணைந்த நுழைவுத்
தேர்வில் (JEE
– Main)
முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை
தேசிய தேர்வுகள் முகமை
(NTA) வெளியிட்டுள்ளது.
நிகழாண்டில் இரண்டு முறை முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
முதல்கட்ட முதல்நிலைத் தேர்வு
ஏப்ரல் 16 முதல் 21ம்
தேதி வரையிலும், இரண்டாம்
கட்ட முதல்நிலைத் தேர்வு
மே 24 முதல் 29ம்
தேதி வரையிலும் நடத்தப்பட
உள்ளது. இதில், முதல்கட்ட
முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 31 கடைசி நாளாகும்.
NIT,
IIIT, IIT உள்ளிட்ட
மத்திய அரசின் உயா்
தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் இளநிலை
பொறியியல் தொழில்நுட்ப பட்டப்
படிப்புகளில் சோக்கை
பெற JEE
தேர்வு நடத்தப்படுகிறது. JEE – Main (முதல்நிலை) மற்றும் JEE – Advanced (முதன்மைத் தேர்வு)
என இரண்டு பகுதிகளாக
இந்தத் தேர்வு நடத்தப்படும்.
இதில்
முதல்நிலைத் தேர்வு என்டிஏ
சார்பிலும், முதன்மைத் தேர்வு
ஏதாவது ஒரு ஐஐடி
சார்பிலும் நடத்தப்படும். JEE முதல்நிலைத் தேர்வில் தகுதி
பெறுபவா்கள் NIT, IIIT கல்விநிறுவனங்களில் சோக்கை
பெற முடியும் என்பதேர்டு, இந்தத் தேர்வில் தகுதி
பெறும் முதல் 2.5 லட்சம்
போ JEE
முதன்மைத் தேர்வை எழுதும்
தகுதியைப் பெறுவா். இந்த
முதன்மைத் தேர்வில் தகுதி
பெறுபவா்கள் நாடு முழுவதும்
உள்ள ஐஐடி கல்வி
நிறுவனங்களில் சோக்கை
பெற முடியும்.
இந்தச்
சூழலில், 2022ம் ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு
அறிவிப்பை என்டிஏ வெளியிட்டுள்ளது.
இந்த
முதல்நிலைத் தேர்வு கடந்த
ஆண்டு மாணவா்களின் வசதிக்காக
4 முறை நடத்தப்பட்டது. அந்த
4 தேர்வுகளில் எதில் அதிக
மதிப்பெண் பெறுகிறாரோ, அதையே
தகுதி மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளும் வகையில் சலுகை
அளிக்கப்பட்டது. நிகழாண்டில் இரண்டு கட்டங்களாக இந்த
தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து என்டிஏ அதிகாரிகள் கூறுகையில், ‘முதல்கட்ட ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 16 முதல்
21-ஆம் தேதி வரையிலும்,
இரண்டாம் கட்ட முதல்நிலைத் தேர்வு மே 24 முதல்
29ம் தேதி வரையிலும்
நடத்தப்பட உள்ளது. இதில்
முதல்கட்ட முதல்நிலைத் தேர்வுக்கான பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
விண்ணப்பிக்க மார்ச் 31 கடைசி கடைசி
தேதியாகும். இந்த தேர்வை
ஹிந்தி, ஆங்கிலம், குஜராத்தி
மொழிகளில் மட்டுமின்றி தமிழ்,
அஸ்ஸாமி, வங்காளி, கன்னடம்,
மலையாளம், மராத்தி, ஒடியா,
பஞ்சாபி, தெலுங்கு, உருது
மொழிகளிலும் எழுதலாம்.