மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் – முதல்வர் ஸ்டாலின்
கடும்
பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகள் மாத உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து சட்டபேரவையில் பேசிய முதல்வர்
மாற்றுத்
திறனாளிகள் என்று பெயர்
சூட்டிய முத்தமிழறிஞர் தலைவர்
கலைஞர் அவர்களுடைய வழியிலே
மாற்றுத் திறனாளிகளின் நீண்ட
நாள் கோரிக்கையை ஏற்று,
ஒரு அறிவிப்பை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
கடுமையான
இயலாமை, கடுமையான அறிவுசார்
குறைபாடு, தசைச்சிதைவுகள் மற்றும்
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்புத் தொகையாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய ரூ.1,500 இனி
ரூ.2,000 ஆக உயர்த்தி
வழங்கப்படும். இதன்மூலம்
2,06,254 பேர் பயனடைவார்கள்.
இதனால்
அரசுக்கு ஆண்டொன்றிற்கு 123 கோடியே
75 இலட்சம் ரூபாய் கூடுதல்
செலவாகும் என தெரிவித்தார்.
உயிர்
காக்கும் திட்டம், “இன்னுயிர்
காப்போம் – நம்மைக் காக்கும்
48 திட்டம்” சாலை விபத்துகளில் சிக்கி, பாதிக்கப்படுகிற விலைமதிப்பற்ற உயிர்களை காக்கக் கூடிய
உன்னதமானத் திட்டம்.
தமிழ்நாட்டில் எந்த மூலையில் ஒருவர்
விபத்துக்குள்ளானாலும், அது
மற்ற மாநிலத்தவரானாலும், ஏன்,
வேறு நாட்டைச் சார்ந்தவராக இருந்தாலும் முதல் 48 மணி
நேர சிகிச்சையை இந்த
அரசே ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய கருணைமிக்க திட்டம்.
இந்தத்
திட்டத்தின்கீழ், 609 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டு, இதுவரை
5,274 பேர் அவசர சிகிச்சைகளைப் பெற்று பயனடைந்திருக்கிறார்கள்.
விபத்தில்
சிக்குகிறவர்களுக்கு “ஒரு
கோல்டன் திட்டம்” இது
என்பது மட்டுமல்ல; மனித
உயிர், மனித உரிமை இரண்டையும் இந்த
அரசு
இரு
கண்கள்
போல்
காத்து
வருகிறது
என்பதற்கு
மேலும்
எடுத்துக்காட்டாக அமைந்துள்ள
திட்டம்.