HomeBlogதமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல்பாஸ் சாத்தியமில்லை – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
- Advertisment -

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல்பாஸ் சாத்தியமில்லை – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

 

All pass is not possible for 12th class students in Tamil Nadu - School Education Description

தமிழகத்தில் 12 ஆம்
வகுப்பு மாணவர்களுக்கு ஆல்பாஸ்
சாத்தியமில்லைபள்ளிக்கல்வித்துறை விளக்கம்

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள்
கடந்த ஆண்டு மார்ச்
மாதம் முதல் மூடப்பட்டன. அதன் பின்னர் கொரோனாவை
கட்டுப்படுத்த மத்திய,
மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு பரவலை கட்டுப்படுத்தினர். பள்ளி மற்றும்
கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும்
என ஆலோசனை வழங்கப்பட்டது. முதற்கட்டமாக உயர்நிலை
வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள்
திறக்க அரசு முடிவு
செய்தது.

அதன்படி
ஜனவரி மாதம் 19 ஆம்
தேதி முதல் 10 மற்றும்
12
ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள்
திறக்கப்பட்டன. அதன்பின்
9
மற்றும் 11 ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு பள்ளிகள்
பிப்ரவரி மாதம் 8 ஆம்
தேதி முதல் திறக்கப்பட்டன. குறைந்த இடைவெளியில் பள்ளிகள்
திறக்கப்பட்டுள்ளதால் 9,10,11-ஆம்
வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள்
நடத்தப்படாமல் தேர்ச்சி
வழங்கப்பட உள்ளதாக தமிழக
அரசு உத்தரவிட்டது.

மேலும்
12-
ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 3-ஆம்
தேதி தொடங்கி மே
21
ஆம் தேதி வரை
நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது
துணை முதல்வர் பன்னீர்
செல்வவம் 12 ஆம் வகுப்பு
பொதுத்தேர்வு ரத்து
செய்வது குறித்து ஆலோசனை
நடத்தப்படும் என
தெரிவித்தார்.

இது
குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்:

“12 ஆம்
வகுப்பு பொதுத்தேர்வு என்பது
உயர்கல்விக்கு மிகவும்
முக்கியமான ஒன்றாகும். எனவே
அதனை ரத்து செய்வது
என்பது சாத்தியமில்லை. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருந்தால் உயர்கல்வி படிப்புகளான இன்ஜினியரிங், மருத்துவம், கட்டடவியல், சட்டம் என
எந்த படிப்பிலும் மாணவர்
சேர்க்கை வழங்கப்பட மாட்டாது.
எனவே அவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்குவது
கட்டாயமாகும்”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -