Home Blog TET தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு குறித்து ஆலோசனை

TET தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு குறித்து ஆலோசனை

0

 

Advice on re-opportunity for those who are unable to write the TET exam

TET தேர்வு
எழுத முடியாதவர்களுக்கு மீண்டும்
வாய்ப்பு
குறித்து ஆலோசனை

கரோனா
பாதிப்பு காலத்தில், ஆசிரியர்
தகுதித் தேர்வை எழுத
முடியாமல் போனவர்களுக்கு மீண்டும்
வாய்ப்பளிப்பது குறித்து
ஆலோசித்து வருகிறோம் என
பள்ளிக்கல்வித் துறை
அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர்
செங்கோட்டையன் செய்தியாளர்களிடம்
கூறியதாவது:

10-ம்
வகுப்பு மற்றும் பிளஸ்
2
பொதுத்தேர்வு குறித்த
அறிவிப்பு முதல்வர் ஒப்புதல்
பெற்று விரைவில் வெளியிடப்படும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலிப்
பணியிடங்களை நிரப்ப ஆய்வு
நடந்து வருகிறது.

பள்ளிகளில் முதல் மற்றும் 3-ம்
சனிக்கிழமை விடுமுறை தற்போதைக்கு அளிக்கப்படாது. 6, 7 மற்றும்
8-
ம் வகுப்புகளைத் தொடங்குவது குறித்து மருத்துவத் துறை,
கல்வியாளர்கள், பெற்றோரிடம் கருத்து கேட்டு, அதன்படி
நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கரோனா
பரவல் காலத்தில், ஆசிரியர்
தேர்வாணையம் நடத்திய டிஆர்பி
தேர்வை பலர் எழுத
முடியவில்லை. இத்தேர்வை எழுத
45
வயது வரம்பாக உள்ளது.
கரோனாவால் இந்த வாய்ப்பை
எழுத முடியாத, வயது
வரம்பைக் கடந்தவர்களுக்கு மீண்டும்
தேர்வு எழுத வாய்ப்பு
வழங்குவது குறித்துஆலோசனை நடந்து
வருகிறது.

கடந்த
2013, 14
மற்றும் 17-ஆம் ஆண்டுகளில் நடந்த TET
தேர்வில் 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில்
48
ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எந்தெந்த இடங்களில்
பணிகள் காலியாக உள்ளதோ
அதற்கேற்ப பணிகள் நிரப்பப்படும் என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version