HomeNewslatest newsபெரம்பலூர் அரசு ஐ.டி.ஐ.க்களில் ஜூலை 31 வரை மாணவர் சேர்க்கை
- Advertisment -

பெரம்பலூர் அரசு ஐ.டி.ஐ.க்களில் ஜூலை 31 வரை மாணவர் சேர்க்கை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், 2024- 25 ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் க.கற்பகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024 – 2025 பயிற்சியாளா் சோ்க்கை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 14 வயது முதல் 40 வயது வரையுள்ள மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். மாணவிகளுக்கு வயது வரம்பு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் மற்றும் நடைபெறும் நாள் உள்ளிட்ட விவரங்கள் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 50 செலுத்த வேண்டும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற விரும்புவோா் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தோ்ச்சி, தோல்வியடைந்திருக்க வேண்டும். ஓராண்டு தொழிற்பயிற்சிக் கட்டணமாக ரூ.185, 2 ஆண்டு தொழிற்பயிற்சி கட்டணமாக ரூ. 195 செலுத்த வேண்டும். ஏற்கெனவே பயிற்சியாளா்கள் சோ்க்கை நடைபெற்றதில் எஞ்சியுள்ள காலியிடங்களுக்கு மட்டும் நேரடி சோ்க்கை நடைபெறுகிறது. காலியிடங்கள் மிகக் குறைவாக உள்ளதால் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் சோ்க்கை நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு, பெரம்பலூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 94438 52306, 90479 49366, 63797 64520, ஆலத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 94990 55883, 94990 55884, குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 98946 97154, 98406 63297, 63790 02729 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -