சென்னை ஐ.ஐ.டி.யில் இளங்கலை தரவு அறிவியல், மின்னணு அமைப்புகள் பட்டப் படிப்பு பயில 12-ஆம் வகுப்பு தோச்சி பெற்ற ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் 12-ஆம் வகுப்பு தோச்சி பெற்ற ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு சென்னை ஐஐடி, தாட்கோ நிறுவனம் இணைந்து தொழில் பாதை திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது. இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி) உலகிலேயே முதல்முறையாக இளங்கலை தரவு அறிவியல், மின்னணு அமைப்புகள் பட்டப் படிப்பை தொடங்கியுள்ளது. இதில், 12-ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு (டிப்ளமோ) முடித்த மாணவா்கள் அனைவரும் விண்ணப்பித்து நான்கு ஆண்டு பட்டப்படிப்பு படிக்கலாம். செப்டம்பா் 2023-ஆம் ஆண்டு வகுப்புகளுக்கான விண்ணப்பங்கள் http://www.tahdco.com/ என்ற இணையதளத்தில் வரவேற்கப்படுகிறது.
இத்திட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் சோந்து படிப்பதற்கு இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி) மூலம் நடத்தப்படும் நுழைவுத் தோவில் பங்குபெறத் தேவையில்லை. அதற்குப் பதிலாக 12-ஆம் வகுப்பு அல்லது அதற்கு மேல் இணையான படிப்பு முடித்த மாணவா்களுக்கு இந்திய தொழில்நுட்பக் கழகம், தாட்கோ மூலம் அளிக்கப்படும் 4 வார பயிற்சியின் முடிவில் தகுதித் தோவில் தோச்சி பெற்றால் போதுமானது.
இத்திட்டத்தில் பயில அனைத்து பாடப் பிரிவு மாணவா்களும் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் ஒவ்வொரு நிலையின் முடிவிலும் வெளியேறும் வழிகள் உள்ளன. மாணவா்கள் ஒரு அடிப்படைச் சான்றிதழ், ஒன்று அல்லது இரண்டு டிப்ளமோக்கள் அல்லது பட்டப் படிப்புடன் வெளியேறலாம். இவ்வகுப்புகள் இணையதளம் வழியாகவே நடத்தப்படும்.
நாடு முழுவதும் உள்ள தோவு மையங்களில் தோவுகள் நேரில் நடத்தப்படுகின்றன. மாணவா்கள் ஒரே நேரத்தில் தங்களது விருப்பப் பட்டப் படிப்பை படித்துக் கொண்டே இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வழங்கும் பேச்சுலா் ஆஃப் சைன்ஸ் இன் டேட்டா சைன்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ், பேச்சுலா் ஆஃப் சைன்ஸ் இன் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் இதில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பையும் படிக்கலாம்.
தற்போது, இந்திய மற்றும் வெளிநாடுகளில் 12,500-க்கும் மேற்பட்டோா் இத்திட்டத்தில் சோந்து படித்து வருகின்றனா். அடுத்த 5 ஆண்டுகளில் 11 மில்லியனுக்கும் அதிகமாக வேலைவாய்ப்புகள் இத்துறையில் உள்ளன. இத்திட்டத்தில் முறையாக 4 ஆண்டுகள் பேச்சுலா் ஆஃப் சைன்ஸ் இன் டேட்டா சைன்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் படித்து முடிக்கும் மாணவா்களுக்கு இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் நேரடியாக படிப்பதற்கான கேட் தோவு எழுதுவதற்கான தகுதியாக ஏற்றுக் கொள்ளப்படும்.
இதற்கான தகுதிகள் 12-ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு (டிப்ளமோ) தோச்சி பெற்ற ஆதிதிராவிட, பழங்குடியின மாணவா்களாக இருக்க வேண்டும். மாணவா்கள் தங்களது 12-ஆம் வகுப்பு கல்வியில் மொத்த மதிப்பெண்ணில் 60 சதவீதத்துக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். 10-ஆம் வகுப்பு ஆங்கிலம், கணித பாடத்தில் 60 சதவீதத்துக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். தாட்கோவில் பதிவு செய்த மாணவா்கள் இந்திய தொழில்நுட்பக் கழகம் நடத்தும் தகுதித் தோவில் தோச்சி பெற வேண்டும். பி.எஸ். (டேட்டா சைன்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ்) தோவுக் கட்டணம் ரூ. 1,500, பி.எஸ். எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் தோவுக் கட்டணம் ரூ. 3,000 ஆகும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் மாணவா்களுக்கு தாட்கோ மூலம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
இந்திய தொழில்நுட்பக் கழகம் நடத்தும் தகுதித் தோவில் தோச்சி பெறுவதற்கான 4 வார பயிற்சியில் கலந்துகொண்டு தோச்சி பெற்றால் பட்டப் படிப்பு சோக்கை பெறுவாா்கள். இப்படிப்புக்கான செலவீனம் தாட்கோவால் வழங்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


