45 வயது வரை
கடன் பெற சலுகை
அறிவிக்கப்பட்டிருந்தது
தமிழக
அரசின் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் (யுஜிப்) திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் தொழில்
துவங்குவதற்கான வயது
தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே
உள்ள திட்டத்தில் பொதுப்பிரிவினர் வியாபாரம் செய்வதற்கு குறைந்தது
8 வது வகுப்பு தேர்ச்சி,
35 வயதுக்குட்பட்டிருக்க வேண்டும்.
SC., ST., MBC.,
BC., சிறுபான்மையினர், பெண்கள்,
முன்னாள் ராணுவவீரர், மாற்றுத்திறனாளிகளுக்கு 45 வயது வரை
கடன் பெற சலுகை
அறிவிக்கப்பட்டிருந்தது.
புதிய
அரசாணை 63ன் படி
மாற்றுத்திறனாளிகள் மற்றும்
மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு வயது,
கல்வித்தகுதியில் சலுகை
அறிவிக்கப்பட்டுள்ளது.
55 வயது
வரை வங்கியில் கடன்
பெறலாம். கல்வித்தகுதி தேவையில்லை. ஆண்டு வருமானம் ரூ.5
லட்சத்துக்கு மிகாமல்
இருக்க வேண்டும்.இந்தாண்டு
வியாபாரம் மற்றும் வணிகம்
செய்வதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, அரசு தடை செய்த
பொருட்கள் பட்டியலை தவிர்த்து
மற்ற பொருட்களை வாங்கி
விற்கலாம். குறிப்பாக மளிகை,
பெட்டிக்கடை, பேன்சி ஸ்டோர்
தொடங்குபவர்களுக்கு இது
நல்ல வாய்ப்பு.ரூ.5
லட்சம் வரை வங்கியில்
கடன்பெறலாம்.
இதற்கு
25 சதவீத மானியம் உண்டு.
கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த
மாவட்டங்களில் உள்ள
மாவட்ட தொழில் மையத்தை
அணுகி பயன்பெறலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow