குரூப் 1 விடைத்தாள் நகல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம் – TNPSC அறிவிப்பு
TNPSC
தேர்வுகளின் குரூப் 1 பதவிகளுக்கான முதன்மை மற்றும் முதனிலை
தேர்வுகள் கடந்த ஜனவரி
மாதம் 3 ஆம் தேதி
நடைபெற்றது. இதில் பங்கேற்ற
தேர்வர்கள் தங்கள் விடைத்தாள்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என
தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது
குறித்து பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு
கட்டுப்பாட்டு
அலுவலர் ஆர்.சுதன்
அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்:
TNPSC
குரூப் 1 தேர்வுகள் எழுதிய
அனைவரும் தங்கள் விடைத்தாள்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி
வரும் ஏப்ரல் 21 ஆம்
தேதி TNPSC அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த இணையதள முறை
தேர்வாணைய வரலாற்றிலேயே முதல்
முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த
விடைத்தாள்களை தேர்வாளர்கள் ஒருமுறை பதிவு (OTR) முறையின்
படி பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம் என அறிவித்துள்ளார். முன்னதாக தேர்வாணையத்தின் வெளிப்படை
தன்மையை அதிகரிக்கும் வகையில்
தேர்வு முறையில் சில
மாற்றங்கள் நடைமுறையில் உள்ளது.
அதன்படி
ஆதார் எண் விவரங்களை
OTR எண்ணுடன் இணைத்தல், தேர்வர்களுக்கு தேர்வு நேரங்களில் மாற்றங்கள், தேர்வர்களின் OMR விடைத்தாள்களில் ரேகை பதிவு, தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்காக தெரிவு
செய்த மாவட்டங்களில் ஏதாவது
ஒன்றை தேர்வு மையமாக
ஒதுக்குதல், விடைத்தாள்கள் பாதுகாப்பு போன்ற நடைமுறைகள் செயல்பாட்டில் உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்ட விடைத்தாள்களின் இணையதள
பதிவேற்றம் மூலம் தேர்வர்கள் உரிய கட்டணத்தை செலுத்தி
விடைத்தாள்களை பெற்றுக்கொள்ளலாம்.