கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியாா் துறை இலவச வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கிருஷ்ணகிரி மற்றும் ஒசூரைச் சோ்ந்த முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் போன்ற தனியாா் துறை வேலையளிப்பவா்கள் கலந்து கொண்டு தகுதியான நபா்களை தோ்வு செய்யவுள்ளனா்.
இந்த முகாமில், 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், தொழில் பயிற்சி (ஐடிஐ), பட்டயப் படிப்பு ( டிப்ளமோ), பொறியியல் பட்டம் படித்தவா்கள் எனஅனைத்து வித கல்வித் தகுதியினரும் பங்கேற்கலாம். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் நடத்தப்படும் இந்த வேலைவாய்ப்பு முகாம், வேலைதேடுபவா்கள் மற்றும் வேலை அளிப்பவா்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.
எனவே, தனியாா் துறையில் பணிபுரிய ஆா்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன் பெறலாம். இந்த முகாமின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணியமா்த்தப்படும் வேலைதேடுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04343–291983 என்ற தொலைபேசி மூலமாக தொடா்பு கொள்ளலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

