
அலைபேசி பழுது நீக்கும் இலவச பயிற்சி
தேனி கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்புபயிற்சி நிலையத்தில் அலைபேசி பழுது நீக்கம், சேவை பயிற்சி மார்ச் 22 முதல் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் 18 வயது நிரம்பிய வேலை இல்லாத கிராமப்புற ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். பயிற்சி காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும். பயிற்சி, மதிய உணவு இலவசம். இப்பயிற்சி வகுப்பிற்கு சேர விரும்புவோர் புகைப்படம், ஆதார் அட்டை நகல் உடன் தேனி தாலுகா அலுவலகம் எதிரே உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியில் தேர்ச்சி பெறுவோறுக்கு சான்றிதழ், தொழில் துவங்கி வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 95003 14193 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி நிலைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

