
புதுச்சேரி, காரைக்காலில் டிசம்பர் 4ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை
இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் மாறுபாடு ஆகிய காரணங்களால் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அந்தமான் அருகே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிபடியாக தீவிரமடைந்து வருகிறது. நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தீவிரமடைந்த நிலையில் இன்று மேலும் தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் வலுப்பெற்று நிலை கொண்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வரும் 3 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் தென்மேற்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் வரும் 5 ஆம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக 4 ஆம் தேதி வட தமிழகம் – மசூலிப்பட்டினத்திற்கு இடையே புயல் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் வரும் 4ம் தேதி புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் யானம் பகுதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவு

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

