மத்திய அரசின் தேசிய சிறுதொழில் கார்ப்பரேஷன் சார்பில், வரும் 12-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
சென்னையில் உள்ள மத்திய அரசின் தேசிய சிறுதொழில் கார்ப்பரேஷன், ஐடிஐ, டிப்ளமோ, டிகிரிமுடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற உதவும் வகையில், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல், தகவல்தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மேம்பாட்டு உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகிறது.
அத்துடன், வேலைவாய்ப்பு பெறுவதற்காக, வேலைவாய்ப்பு முகாம்களை அவ்வப்போது நடத்தி வருகிறது.
அந்த வகையில், தற்போது சிறப்பு வேலைவாய்ப்பு முகாமைவரும் 12-ம் தேதி நடத்துகிறது. ‘பி-செக்டார்’, எண்.24, கிண்டிதொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-32 என்ற முகவரியில் உள்ள தேசிய சிறுதொழில் கார்ப்பரேஷன் (NSIC) அலுவலகத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
எனவே, இதில் பங்கேற்க விரும்புபவர்கள் https://tinyurl.com/nsicjobfair-register என்ற இணையதளத்தில் முன்பதிவுசெய்ய வேண்டும். இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு 044-2225 2335,73053 75041 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


