தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, வேலைவாய்ப்பு முகாம் வரும் 13ம் தேதி செஞ்சியில் நடக்கிறது.இதுகுறித்து கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
செஞ்சி ரங்கபூபதி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வரும் 13ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கிறது.விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த வேலை வாய்ப்பற்ற கிராமப்புற மற்றும் நகர இளைஞர்கள் பங்கேற்று தங்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்பை தேர்வு செய்யலாம்.
முகாமில், பங்கேற்க வரும் இளைஞர்கள் தங்களின் கல்விச் சான்றுகள் அசல் மற்றும் நகல்கள் மற்றும் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 ஆகியவற்றோடு பங்கேற்க வேண்டும்.
முகாமில் பங்கேற்கும் ஆண், பெண் வயது வரம்பு 18 முதல் 40 வரை இருக்க வேண்டும். கல்வித்தகுதி 8ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை பயின்றிருக்க வேண்டும்.
இது தொடர்பாக தொடர்பாக விபரம் பெற விழுப்புரம் மகளிர் திட்ட அலுவலகம் 04146 223736 என்ற தொலைபேசி மூலமும், உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் 04146 226417 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


