TAMIL MIXER
EDUCATION.ன்
விவசாய செய்திகள்
ஒருங்கிணைந்த
பண்ணை
திட்டத்தில்
பயனடைய
அழைப்பு
ஒருங்கிணைந்த
பண்ணையத்
திட்டத்தில்
பயனடைய
விவசாயிகளுக்கு
அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
கோவை
மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முத்துலட்சுமி கூறியதாவது:
திட்டத்தில் பயிர் சாகுபடி மட்டுமின்றி, பண்ணையம் சார்ந்த செயல்பாடுகளை
ஒருங்கிணைத்து
ஆண்டு
முழுவதும்
விவசாயிகளுக்கு
வருவாய்
கிடைக்க,
வழிவகை
செய்யப்படுகிறது.
இந்தாண்டும் இத்திட்டம் செயல்படுத்தப்பட
உள்ளது.தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், மானாவாரி பகுதிகளில் கோவை மாவட்டத்தில்
முதற்கட்டமாக,
மதுக்கரை
வட்டத்தில்,
60, சுல்தான்பேட்டை
வட்டாரத்தில்,
40 யூனிட்
என்ற
அளவில்
அமல்படுத்தப்படுகிறது.
இரண்டாம் கட்டமாக அன்னுார்(வடக்கு), பொள்ளாச்சி(தெற்கு), சூலுார் வட்டாரங்களில்
தலா,
40 யூனிட்
என,
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு திட்ட யூனிட்டிற்கும்
இந்த
ஆண்டில்
பொதுப்
பிரிவினருக்கு
ரூ.30
ஆயிரம்,
ஆதி
திராவிட
மற்றும்
பழங்குடியின
பிரிவு,
சிறு,
குறு
விவசாயிகளுக்கு
ரூ.50
ஆயிரம்
மதிப்பிலும்
பின்னேற்பு
மானியமாக
வழங்கப்படவுள்ளது.
திட்டத்தில் பயன்பெற விவசாயிகள், உழவன் செயலி மூலம் பதிவு செய்யலாம் அல்லது இத்திட்டம் செயல்படுத்தப்படும்
கோவை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


