HomeBlogஅரசுக் கல்லூரிகளுக்கு அதிரடி உத்தரவு - மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இனி கல்வி கட்டணம் இல்லை

அரசுக் கல்லூரிகளுக்கு அதிரடி உத்தரவு – மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இனி கல்வி கட்டணம் இல்லை

அரசுக் கல்லூரிகளுக்கு அதிரடி உத்தரவு - மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இனி கல்வி கட்டணம் இல்லை

TAMIL MIXER
EDUCATION.
ன்
கல்வி செய்திகள்

அரசு கல்லூரிகளுக்கு அதிரடி உத்தரவுமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இனி கல்வி கட்டணம் இல்லை

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முடிவடைந்து மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. மே 8ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது முதல் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.




இந்த முறை 12ம் வகுப்பு படித்த பலர் அரசு கலை கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் அரசு கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கடந்த 22ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

மேலும் மாணவர்களின் விண்ணப்பங்கள் https://www.tngasa.in/
என்ற தளத்தில் மாணவர்கள் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த மாதம் 25 ஆம் தேதி தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர தரவரிசை பட்டியல் வெளியானது.




அதனை தொடர்ந்து ஜூன் 1ம் தேதி முதல்கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது. இந்நிலையில் உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பின் படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வாங்க கூடாது என உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து வெளியான அறிவிப்பில் தமிழ்நாட்டில் ஏற்கனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்த நிலையில் தற்போது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.




மேலும் அதனை அனைத்து கல்லூரிகளும் கட்டாயம் கடை பிடிக்க வேண்டும். அதனை பின்பற்றாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!