சென்னை, மாநகர பேருந்துகளில் 60 வயதிற்கு மேற்பட்ட சென்னை வாழ் முதியோர், இலவசமாக பயணம் செய்யும் வகையில், இலவச பயண டோக்கன், ஜூன் மாதம் வரை ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளது.
தற்போது, அடுத்த அரையாண்டிற்கு அதாவது, வரும் ஜூலை முதல் டிசம்பர் வரை பயன்படுத்த, ஒரு மாதத்திற்கு 10 டோக்கன் வீதம், ஆறு மாதங்களுக்கு உரிய பயண டோக்கன், அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு வழங்குதல் போன்ற சேவை வழங்கப்படுகிறது.
வரும் 21 முதல் ஜூலை 31ம் தேதி வரை, காலை 8:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை, பெசன்ட் நகர், தி.நகர், சென்ட்ரல், ஆவடி, வியாசர்பாடி, குரோம்பேட்டை, தாம்பரம் உட்பட 40 இடங்களில் இலவச டோக்கன்கள் பெறலாம்.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
இந்த இலவச டோக்கன், அடையாள அட்டை புதிதாக பெறவும், இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்றாக ஆதார் அட்டை நகல் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
சென்னை மாநகர போக்குவரத்து கழக செய்திக்குறிப்பில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


