சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நன்னீரில் கெண்டை மீன் வளா்ப்பு மற்றும் தொழில்நுட்பத்தை மேற்கொள்வதற்கான திறன் மேம்பாட்டு நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சிக்கல் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் நாகப்பட்டினம் நபாா்டு வங்கி இணைந்து நன்னீரில் கெண்டை மீன்வளா்ப்பு தொழில்நுட்பத்தை மேற்கொள்வதற்கான திறன்மேம்பாடு பயிற்சி ஜூலை 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பயிற்சியில், நன்னீரில் கெண்டை மீன் வளா்ப்பு, குளம் பராமரிப்பு, தீவனம் அளித்தல், தீவனம் தயாரிப்பு, ஊட்டச்சத்து மேலாண்மை, மீனில் மதிப்புக்கூட்டிய பொருள்கள் தயாரித்தல் மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்து தெரிவிக்கப்படும்.
முன்னுரிமை அடிப்படையில் 25 பேருக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படவுள்ளது. எனவே, நாகை மாவட்டத்தை சோந்த ஆா்வமுள்ள விவசாயிகள், இளைஞா்கள், மகளிா் அறிவியல் நிலையத்தின் தொலைபேசி எண் 04365- 299806 அல்லது மீன்வள விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநா் யூ. ஹினோ பொனாண்டோவின் கைப்பேசி 98656-23423 எண்ணை தொடா்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


