UGC., NET., தேர்வு
– ஆன்லைன் விண்ணப்பம் பதிவு துவக்கம்
கல்லுாரி
உதவி பேராசிரியர் பணிக்கான
UGC., NET தேர்வு
ஆன்லைன் விண்ணப்ப பதிவு
துவங்கியது.
கல்லுாரி
உதவி பேராசிரியர் பணி
மற்றும் இளநிலை ஆய்வாளர்
உதவித்தொகை பெறுவதற்கு UGC.,
NET தேர்வை ஆண்டுக்கு
இரு முறை தேசிய
தேர்வு முகமை நடத்தி
வருகிறது.
நடப்பாண்டுக்கான தேர்வு அறிவிப்பை தேசிய
தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.
UGC.,
NET தேர்வு வரும்
மே 2ம் தேதி
துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே
3 முதல் 17 வரை பல்வேறு
பாடப்பிரிவுகளுக்கு தேர்வு
நடக்க உள்ளது. காலை,
09.00மணி முதல் மதியம்
12 மணி வரை முதல்
தாள், பிற்பகல், 3 மணி
முதல், மாலை, 06.00 மணி
வரை இரண்டாம் தாள்
தேர்வு நடத்தப்பட உள்ளது.
ஆன்லைன்
வாயிலாக தேர்வு நடத்தப்படுகிறது. ஆன்லைன் விண்ணப்ப பதிவு
நேற்று முன்தினம் துவங்கியது. மார்ச் 2ம் தேதி
கடைசி நாள். மேலும்
தகவலுக்கு www.nta.ac.in,
https://ugcnet.nta.nic.in என்ற
இணையதளத்தில் தெரிந்து
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


