TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
டைனிங் டேபிள்
பேப்பர் ரோல் தயாரிப்பு
தேவைப்படும் மூலப்பொருட்கள்:
பெரிய
அளவில் பேப்பர் ரோல்
(paper roll), Dining table paper roll making machine, Ink போன்றவை
மூலப்பொருட்களாக தேவைப்படும்.
பேப்பர்
ரோல் தயாரிப்பு இயந்திரம்:
Dining table paper
roll making machine விலை 2,00,000/- ரூபாயில்
இருந்து அனைத்து ஆன்லைன்
ஸ்டோரிலும் கிடைக்கின்றது. எனவே
மிக எளிதில் ஆன்லைன்
மூலமாக ஆர்டர் செய்தும்
பெற்று கொள்ளலாம்.
தயாரிக்கும் முறை:
பேப்பர்
ரோலினை எம்டியாக விற்பனை
செய்வதற்கு பதில் ஏதேனும்
டிசைன் செய்து விற்பனை
செய்தால் மக்களிடம் அதிக
வரவேற்பை பெறலாம். எனவே
பேப்பர் ரோல் மற்றும்
Ink இவை இரண்டியும் Dining table paper
roll making machine-யில் செட் செய்து
இயந்திரத்தை இயக்கினால் பேப்பர்
ரோலில் டிசைன்கள் பதியப்பட்டு பேப்பர் ரோல் ஆகும்.
இதனை விற்பனை செய்யலாம்.
சந்தை
வாய்ப்பு:
டைனிங்
டேபிள் பேப்பர் ரோலினை
அனைத்து வகை விசேஷங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதால்,
சந்தையில் இதன் தேவை
அதிகம் வரவேற்கப்படுகிறது. சிறிய
மளிகை கடையில் இருந்து
அனைத்து வகை டிபார்மண்ட் ஸ்டோரிலும் இந்த பேப்பர்
ரோலினை விற்பனை செய்யலாம்.
தயாரிப்பு
செலவு:
பேப்பர்
ரோல் தயார் செய்ய
500 கிலோ பேப்பர் ரோல்
வாங்க வேண்டியதாக இருக்கும்,
இந்த பேப்பர் ரோல்
தரத்தை பொறுத்து 1 கிலோ
ரூபாய் 25 முதல் 28 ரூபாய்
வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு
கிலோ டைனிங் டேபிள்
பேப்பர் ரோல் தயார்
செய்ய மின்சார செலவு
5 ரூபாய் ஆகும் என்று
வைத்து கொள்வோம். எனவே
ஒரு கிலோ டைனிங்
டேபிள் பேப்பர் ரோல்
தயார் செய்ய ஆகும்
செலவு 30 ரூபாய் ஆகும்.
சந்தையில்
45 ரூபாய் முதல் 50 ரூபாய்
வரை விற்பனை செய்யலாம்.
இதன் மூலம் ஒரு
கிலோ டைனிங் டேபிள்
பேப்பர் ரோலில் இருந்து
20 ரூபாய் இலாபம் பெறலாம்.
ஒரு நாளிற்கு 50 கிலோ
வரை தயார் செய்து
விற்பனை செய்தால் 1000 ரூபாய்
வரை இலாபம் பெறலாம்.
சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


