இடைக்கால பட்ஜெட் 2021-முழு விபரங்கள் PDF வடிவில்
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற
உள்ள நிலையில் சென்னை
கலைவாணர் அரங்கில் இடைக்கால
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் ஒ.பன்னீர்
செல்வம் இடைக்கால பட்ஜெட்
உரையை வாசித்தார்.
இந்த
அறிவிப்பில் பல்வேறு திட்டங்கள் இடம் பெற்று வருகின்றன.
ஒவ்வொரு பட்ஜெட்டிலும் துறை
வாரியாக நிதி ஒதுக்கீடு
செய்யப்படும்.
இந்த
பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
என்பதை பார்ப்போம்:
சுகாதாரம், வேளாண்மை:
சுகாதாரத்
துறைக்கு ரூ.19,420 கோடி
நிதி ஒதுக்கீடு
கொரோனா
தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.3,352
கோடி ஒதுக்கீடு
பயிர்
கடன் தள்ளுபடி திட்டத்துக்கு ரூ.5000 கோடி நிதி
ஒதுக்கீடு
வேளாண்துறைக்கு ரூ.11,982
கோடி நிதி ஒதுக்கீடு:
கோவை
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு
காவல்துறை, நீதித்துறை:
காவல்துறைக்கு ரூ.9,567 கோடி நிதி
ஒதுக்கீடு
நீதித்துறை நிர்வாகத்துக்கு ரூ.1,437
கோடி ஒதுக்கீடு
மீன்வளத்துறைக்கு ரூ.580 கோடி
நிதி ஒதுக்கீடு
நீர்வளத்
துறைக்கு ரூ.6,453 கோடி
நிதி ஒதுக்கீடு
உள்ளாட்சி
துறைகளுக்கு ரூ.22,218 கோடி
நிதி ஒதுக்கீடு
உயர்கல்வித்துறை, நெடுஞ்சாலைத் துறை:
பிரதமர்
வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.3,700 கோடி நிதி
ஒதுக்கீடு
நெடுஞ்சாலை துறைக்கு ரூ.18,750 கோடி
நிதி ஒதுக்கீடு
உயர்கல்வி
துறைக்கு ரூ.5478 நிதி
ஒதுக்கீடு
கைத்தறி
துறைக்கு ரூ.1,224 கோடி
நிதி ஒதுக்கீடு
சமூக
நலத்துறைக்கு ரூ.1,953
கோடி நிதி ஒதுக்கீடு
மத்திய உணவு திட்டம், புதிய மருத்துவ கல்லூரிகள்:
ஆதி
திராவிடர் நலத்துறைக்கு ரூ.1,932
கோடி நிதி ஒதுக்கீடு
காவல்துறையை நவீனமயமாக்க ரூ.100 கோடி
நிதி ஒதுக்கீடு
மதிய
உணவுத் திட்டத்துக்கு ரூ.1,953
கோடி
புதிய
மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.2,470
கோடி
அம்மா
மினி கிளினிக் திட்டத்துக்கு ரூ.44 கோடி நிதி
ஒதுக்கீடு
மாற்றுத்திறனாளிகள் நலன், ஸ்மார்ட் சிட்டி:
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.688.48
கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாடு
தொழில் முதலீட்டு கழகத்தை
வலுப்படுத்த ரூ.300 கோடி நிதி
ஒதுக்கீடு
நகர்ப்புற
வடிகால் திட்டத்துக்கு ரூ.1,450
கோடி நிதி ஒதுக்கீடு
ஸ்மார்ட்
சிட்டி திட்டத்திற்கு ரூ
.2,350 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னையை
தனித்தன்மை வாய்ந்த நகரமாக
மாற்ற ரூ.3,410 கோடி
நிதி ஒதுக்கீடு
மீன்பிடி துறைமுகங்கள்:
குடிநீர்
குழாய் இணைப்புகளுக்கு ரூ.3,016
கோடி நிதி ஒதுக்கீடு
சுகாதார
வளாகங்கள் கட்டுவதற்கு ரூ
.44.33 கோடி நிதி ஒதுக்கீடு
மீன்பிடி
துறைமுகங்கள், இறங்குதளங்கள் பணிகளுக்கு ரூ.1374 கோடி
நிதி ஒதுக்கீடு
மின்சாரத் துறை, அரசு பணியாளர்கள்:
மின்சாரத்
துறைக்கு ரூ.7,217 கோடி
நிதி ஒதுக்கீடு
மின்கட்ட
மானியங்களுக்கு ரூ.8,834
கோடி நிதி ஒதுக்கீடு
பள்ளி
கல்விதுறைக்கு ரூ.34,181
கோடி நிதி ஒதுக்கீடு
சத்துணவு
திட்டங்களுக்கு ரூ.1953.98
கோடி நிதி ஒதுக்கீடு
அரசு
பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.1,02,049
கோடி நிதிஒதுக்கீடு
தமிழ்நாடு
திறன் மேம்பாட்டு கழகத்துக்கு ரூ.200 கோடி நிதி
ஒதுக்கீடு
சிறு
குறு நடுத்தர தொழில்
நிறுவனங்களுக்கு ரூ.300
கோடி நிதி ஒதுக்கீடு.
Budget PDF in
Tamil: Click
Here
Budget PDF in English: Click
Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


