பெண்களுக்கு இலவச
தொழில் பயிற்சி
மதுரையில்
அம்பேத்கர் மகளிர் மேம்பாட்டு மையம் சார்பில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின பெண்களுக்கு இலவச
தொழில் பயிற்சிகள் துவங்கப்பட்டுள்ளன.
பத்தாம்
வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு அழகுக்கலை, ஐந்தாம் வகுப்பு
தேர்ச்சி பெற்றோருக்கு தையல்பயிற்சி 40 நாட்களும், பி.காம்.,
முடித்தோருக்கு டேலி
அக்கவுண்ட் எக்ஸ்கியூட்டிவ் பயிற்சி
25 நாட்களுக்கும் இலவசமாக
அளிக்கப்படும்.
மத்திய
அரசின் சான்றிதழ், ஊக்க
தொகை வழங்கப்படும். தகுதியுள்ள 18 முதல் 40 வயது பெண்கள்
போட்டோ, ரேஷன் கார்டு,
ஆதார் அட்டை, வங்கி
பாஸ் புத்தகம் உள்ளிட்ட
சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.
வேலை
வாய்ப்பும் தொழில் துவங்கவும் உதவி செய்யப்படும். விவரங்களுக்கு 9087712555 அலைபேசியில் தொடர்பு
கொள்ளலாம் என மைய
செயலாளர் தெரிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


