TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
பஞ்சாப் நேஷனல்
வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய
IFSC எண் – மார்ச் 31 கடைசி
நாள்
பஞ்சாப்
நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் புதிய IFSC எண்ணுக்கு
மார்ச் மாதம் 31 ஆம்
தேதிக்குள் மாறாவிட்டால் பரிவர்த்தனை செய்ய பிரச்சனை ஏற்படும்
என வங்கி நிர்வாகம்
சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய
அரசு, பஞ்சாப் நேஷனல்
வங்கி, ஓரியண்டல்
பேங்க் ஆஃப் காமர்ஸ்
மற்றும் யுனைடட் பேங்க்
ஆஃப் இந்தியா ஆகிய
இரண்டு வங்கிகளுடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல்
மாதம் 1 ஆம் தேதி
முதல் புதிய வங்கி
விதிமுறைகள் அமலுக்கு வருவதால்
பழைய வாடிக்கையாளர்கள் பழைய
IFSC Code மற்றும் MICR Code ஆகியவற்றை
மாற்ற வேண்டும். அதற்கான
கடைசி தேதி மார்ச்
மாதம் 31 ஆம் தேதி
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய
காசோலைப் புத்தகம், புதிய
IFSC Code போன்றவற்றை மார்ச் மாதம்
31 ஆம் தேதிக்கு மேல்
மாற்றாமல் இருந்தால் அவர்களுக்கு பரிவர்த்தனை செய்வதில் சிக்கல்
ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து
வாடிக்கையாளர்களுக்கு எதாவது
சந்தேகம் இருந்தால் அதனை
தீர்த்து கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
IFSC Code மாற்றம்
தொடர்பான வாடிக்கையாளர்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக டோல்
ஃப்ரீ நம்பர் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து
தகவல் தெரிந்து கொள்ள
18001802222 அல்லது 18001032222 ஆகிய
எண்களுக்கு அழைக்கலாம். மார்ச்
31 ஆம் தேதிக்குள் மாற்றி
கொள்பவர்களுக்கு தொடர்ந்து
வழக்கம் போல சேவை
வழங்கலாம். இல்லையேல் சேவை
பாதிக்கப்படும் என
பஞ்சாப் நேஷனல் வங்கி
எச்சரிக்கை செய்துள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


