இரண்டாம் நிலை
காவலர் உடற்தகுதித் தேர்வு,
சான்றிதழ் சரிபார்ப்பு – TNUSRB
தமிழ்நாடு
சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலர்
காலிப்பணியிடங்களுக்கான போட்டித்
தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள்
வெளியிடப்பட்ட நிலையில்,
அதற்கான உடற்தகுதித் தேர்வு,
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்
தேதி குறித்த விபரங்கள்
வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள காவலர்,
சிறைக்காவலர் மற்றும்
தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட
பணியிடங்களுக்கு தமிழ்நாடு
சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மூலம் தேர்வுகள்
நடத்தப்பட்டு ஆட்கள்
தேர்வு செய்யப்படுவர்.
11,741 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட போட்டித் தேர்வுக்கான முடிவுகள் கடந்த பிப்ரவரி
19ம் தேதி வெளியிடப்பட்டன. இம்முறை சட்டமன்ற பொதுத்தேர்தல் காரணமாக உடற்தகுதித் தேர்வுகள்
தாமதமாக நடைபெறும் என
தெரிவிக்கப்பட்டது.
எழுத்துத்
தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்தகுதித் தேர்வு, சான்றிதழ்
சரிபார்ப்பு ஆகியவை நடத்தப்பட்டு இறுதி தேர்வு பட்டியல்
வெளியிடப்படும். இந்நிலையில் 11,741 இரண்டாம் நிலை
காவலர் பணியிடங்களுக்கான உடற்தகுதித்தேர்வு (PET) வரும் ஏப்ரல்
12ம் தேதி நடைபெறும்
என முன்னதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அதில்
மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி உடற்தகுதித்தேர்வு ஏப்ரல்
21ல் நடைபெறும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNUSRB PC PET Exam Date 2021 – Again Changed: Click
Here
மேலும்
சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல்
21ம் தேதி நடைபெறும்
எனவும் கூறப்பட்டு உள்ளது.
உடற்தகுதி தேர்வு நடைபெறும்
இடங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அதனை
உறுதிப்படுத்துமாறு அனைத்து
எஸ்பிக்களுக்கும் தற்போது
கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.