40% செமஸ்டர் படிப்புகளை ஆன்லைனில் கற்கலாம் – UGC
இந்தியாவின் பல்கலைக்கழக மானியக்குழு (UGC)
என்பது இந்தியாவில் உள்ள
பல்கலைக்கழகங்களின் கல்வியினை
ஒருங்கிணைப்பது, மேற்பார்வையிடுவது, கல்வியின் தரத்தை
உறுதி செய்வது போன்ற
பணிகளுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும். SWAYAM என்பது இந்தியாவின் மிகப்பெரிய திறந்த ஆன்லைன்
பாடநெறி தளமாகும். தொழில்நுட்பம் அல்லாத முதுகலை படிப்புகளுக்கான தேசிய ஒருகிணைப்பாளராக UGC,
SWAYAM.ஐ உருவாக்கியுள்ளது.
ஆன்லைன்
கற்றல் பாட நெறிகளுக்கான கட்டமைப்பு, இளம் மாணவர்களுக்கான கற்றல் ஒழுங்கு முறைகளின்
ஆய்வு, நாடு முழுவதும்
உள்ள பல்கலைக்கழகங்கள் ஸ்வயாம்
இயங்குதளம் வழியாக பாடங்களை
ஆன்லைனில் 40% கற்பிக்கலாம். தற்போதைய
கற்றல் சூழல் யுஜிசி.,யின்
இந்த புதிய விதிகள்
எதிர்காலத்தில் மாணவர்களுக்கு பின்பற்ற எளிதாக இருக்கும்
என்று கூறப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் யுஜிசி அறிவித்துள்ள புதிய வழிமுறைகளை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நான்கு
வாரங்களுக்குள் ஏற்றுக்
கொள்ள வேண்டும். மேலும்,
அதன்படி, தேவையான சட்ட
திருத்தங்களையும் செய்ய
வேண்டும். SWAYAM இயங்குதளத்தின் மூலம் படித்திருந்தாலும் மாணவர்களை
எந்தவொரு பல்கலையும் மறுக்காது
என்றும் கூறப்பட்டுள்ளது.