கோயம்பேடு சந்தையில்
சில்லறை விற்பனைக்கு ஏப்ரல்
10 முதல் தடை
கடந்த
ஆண்டு முதல் தமிழகத்தில் CORONA நோய்த்தொற்று அதிவேகமாக
பரவி வந்தது. இதன்
காரணமாக தமிழகத்தில் பல
கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. கடந்த
ஆண்டு பொதுமுடக்கத்தின் போது
அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே
தமிழக அரசு அனுமதி
வழங்கி இருந்தது. பின்பு
நாளடைவில் கொரோனா நோய்த்தொற்று குறைந்து வந்ததால் பல
தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வந்தது.
கடந்த
ஆண்டு அத்தியாவசிய தேவைகளுக்காக சென்னையில் உள்ள கோயம்பேடு
சந்தை திறக்கப்பட்டது. இதனால்
அங்கு மக்கள் கூட்டம்
அலைமோதியது. இதன் காரணமாக
அங்கு கொரோனா பரவல்
மீண்டும் அதிகரிக்க துவங்கியது. பின்பு பல பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது
அலை தீவிரமாக பரவி
வருகிறது.
இதனால்
இன்று (April 8) தமிழக
அரசு புதிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிவித்தது. இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் வருகிற
ஏப்ரல் மாதம் 10ம்
தேதி முதல் அமலுக்கு
வரவுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில்
கொரோனா அதிகரிப்பு காரணமாக
சில்லறை கடைகள் விற்பனைக்கு தடை செய்துள்ளனர். இதனால்
சில்லறை விற்பனை கடை
உரிமையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


