Sunday, August 10, 2025
HomeBlogதமிழகத்தில் அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற பணிகளுக்கு கட்டுப்பாடு

தமிழகத்தில் அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற பணிகளுக்கு கட்டுப்பாடு

 

Restriction on tasks other than essential functions in Tamil Nadu

தமிழகத்தில் அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற
பணிகளுக்கு கட்டுப்பாடு

தமிழகத்தில் CORONA பரவலின் இரண்டாம்
அலை தீவிரமடைந்து வருகிறது.
பரவி வரும் கொரோனா
தொற்றை கட்டுப்படுத்தும் விதத்தில்
மாநில அரசு பல்வேறு
கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வரும் நாட்களில்
இரவுநேர ஊரடங்குகள் அமல்படுத்தப்படலாம். தொடர்ந்து தனியார்
நிறுவனங்கள் மட்டும் அரசு
அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களை வீட்டிலிருந்து பணிபுரிதல் ஊக்குவிக்கலாம்.

அதே
சமயம் அரசு அலுவலகங்களில் பணியாளர்கள் பணிபுரியும் விகிதத்தை
குறைக்கலாம். கொரோனா தொற்று
அதிகமாக பரவக்கூடிய போக்குவரத்தில் தனி மனித இடைவெளியை
உறுதி செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். மக்கள்
அதிகம் கூடும் இடங்களாகிய பூங்காக்கள், கடற்கரை, கோவில்கள்,
திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.

மக்களின்
வாழ்வாதாரம் பாதிக்காத வகையில்
மாநில அரசு கட்டுப்பாடுகளை விதிக்க முன் வர
வேண்டும். ஒவ்வொரு மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் முழு
வீச்சில் செயல்பட வேண்டும்.
குறிப்பாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைய வேண்டும்.
முகக்கவசம் அணிவது குறித்த
விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். தொடர்ந்து
அத்தியாவசிய பணிகள் தவிர
மற்ற பணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது
பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments