முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்
– கோவை மாநகராட்சி
தமிழகத்தில் தற்போது CORONA.வின்
இரண்டாவது அலை காரணமாக
நாள் ஒன்றுக்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை
தொடர்ந்து உச்சத்தை தொட்டு
வருகிறது. அதேபோல் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனை
கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட
அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து ஆலோசனை
நடத்தி வருகின்றனர்.
மேலும்
CORONA நோய்த்தொற்று நிலவரத்தை
கண்டறிவதற்கு தற்போது
மாவட்டந்தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தமிழக
மக்களை அதிகாரிகள் தொடர்ந்து
மாஸ்க் அணிதல் மற்றும்
சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே CORONA பரவல் கோவையில்
அதிகமாக கண்டறியப்பட்டு வருகிறது.
இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில்
கோவை மாநகராட்சி ஓர்
அதிரடியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி கோவையில் மக்கள்
மாஸ்க் அணியாதவர்களுக்கு அதிரடியாக
ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. CORONA நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டது என்று
விளக்கமளித்துள்ளது மாநகராட்சி.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


