கொரோனா தடுப்பூசி
போட்டும் பாதிப்பு ஏற்பட்டால் சம்பள பிடித்தம் இன்றி
7 நாட்கள் விடுமுறை – மேலாண்
இயக்குனர்
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக
கடந்த ஆண்டு மார்ச்
மாதம் முதல் முழு
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து
கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. வணிக நிறுவனங்களும் செயல்படாத நிலையில் இருந்தது.
இதனால் மக்களின் இயல்பு
வாழ்கை பாதிப்படைந்தது. முழு
ஊரடங்கு அறிவிப்பு பின்னர்
தொற்றின் பாதிப்பு குறைந்து
வந்தது.
இந்த
காரணத்தால் ஊரடங்கில் தளர்வுகள்
அளிக்கப்பட்டு வந்தது.
இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மெல்ல செயல்பட தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா
தொற்றின் இரண்டாம் அலை
மார்ச் மாதத்தில் இருந்து
பரவத் தொடங்கியது. திடீரென்று கடந்த 10 நாட்களில் தொற்று
பாதிப்பு புதிய உச்சத்தை
அடைந்து வருகிறது. இதனால்
இன்று முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு
அமல்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில் மாநகர மற்றும் விரைவு
போக்குவரத்து ஊழியர்கள்
கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு
உத்தரவிட்டுள்ளது. அனைவரும்
கட்டாயம் தடுப்பூசி போட
வேண்டும் என்றும், அனைத்து
ஊழியர்களுக்கும் அரசு
போக்குவரத்து கழக
மேலாண் இயக்குனர் இளங்கோவன்
அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தடுப்பூசி
போட்டும் கொரோனா பாதிப்பு
ஏற்பட்டால் நலம் அடையும்
வரை சம்பள பிடித்தம்
இன்றி 7 நாட்கள் விடுமுறை
அளிக்கப்படும் என்று
அறிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


