HomeBlogதமிழக நகர பேருந்துகளில் பெண்களுக்கு நாளை முதல் இலவசம் – முதல்வர் ஸ்டாலின்

தமிழக நகர பேருந்துகளில் பெண்களுக்கு நாளை முதல் இலவசம் – முதல்வர் ஸ்டாலின்

தமிழக நகர
பேருந்துகளில் பெண்களுக்கு நாளை முதல் இலவசம்
முதல்வர் ஸ்டாலின்

தமிழக
முதல்வராக இன்று காலை
பதவி ஏற்ற திமுக
தலைவர் முக ஸ்டாலின்
மக்களுக்கு தேவையான பல
நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். கொரோனா பரவலை கருத்தில்
கொண்டு பல சலுகைகள்
அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதல்
திட்டமாக, கொரோனா சிகிச்சைக்கு  தனியார்
மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து
கட்டணத்தையும் அரசே
ஏற்றுக் கொள்ளும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா
நிவாரண நிதியாக 4000 ரூபாய்
வழங்கப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே
போல் ஆவின் பால்
விலை லிட்டருக்கு 3 ரூபாய்
குறைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த
விலை நிலவரம் வரும்
மே 16 ஆம் தேதி
முதல் அமல்படுத்தப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து
மகளிரும் சாதாரண நகர
பேருந்துகளில் நாளை
முதல் இலவசமாக பயணிக்கலாம் என்பதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டுள்ளார். புகார் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காண
புதிதாக ஒரு துறை
அமைக்கப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார்
மருத்துவமனைகளில் கொரோனா
பாதிப்பு காரணமாக சிகிச்சை
பெற்று வரும் அனைவரின்
சிகிச்சை கட்டணத்தை இனி
தமிழக அரசே ஏற்றுக்
கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் காப்பீடு
திட்டத்தின் கீழ் இதற்கான
கட்டணம் செலுத்தப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக
முதல்வரின் இந்த அதிரடி
திட்டங்களால் மக்கள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular