💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
TNPSC இன்று (12.05.2021) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2020ஆம் ஆண்டு டிசம்பர்
திங்களில் நடத்தப்பட்ட துறை
தேர்வுகளில் 129 தேர்வுகளின் முடிவுகளும், எந்தெந்த தேர்வுகளின் முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளன என்ற
பட்டியலும் 08.05.2021 அன்று
தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அப்பட்டியலில் 14 தேர்வுகளைத் தவிர மற்ற அனைத்து
துறைத் தேர்வுகளும் இடம்பெற்றுள்ளன.
கொரோனா
பெரும் தொற்று காரணத்தால் தமிழக அரசால் ஊரடங்கு
அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
மீதமுள்ள 14 தேர்வுகளின் முடிவுகள்
08.06.2021 அன்று வெளியிடப்படும்.
மேலும்,
இத்தேர்வுகள் எழுத
விழையும் தேர்வர்களின் நலனை
கருத்தில் கொண்டு, மே
2021 துறைத் தேர்வுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி
தேதி, 15.06.2021 வரை
நீட்டிக்கப்படுகிறது.