தமிழகத்தில் செவிலியர்களுக்கு ரூ.20000/-, மருத்துவர்களுக்கு ரூ.30000/- ஊக்கத்தொகை – முதல்வர்
கொரோனா
தொற்று காலத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் மிகுந்த
சேவை மனப்பான்மையோடு நோயாளிகளுக்கு தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று
பல தரப்புகளில் இருந்தும்
கோரிக்கைகள் வைக்கப்பட்டது. ராமதாஸ்
அவர்கள் கூட நேற்று
இது தொடர்பாக முதல்வருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பினார்.
தற்போது
கொரோனா பணியில் ஈடுபட்டு
வரும் மருத்துவர்கள் மற்றும்
செவிலியர்களுக்கு ஊக்கதொகை
வழங்குவது குறித்து முதல்வர்
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா
நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த
ஒரு ஆண்டுக்கும் மேலாக
மருத்துவர்களும், செவிலியர்களும் இதரப் பணியாளர்களும் அயராது
சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவ பணியில் இருந்த
மருத்துவர்கள் தங்கள்
உயிரை துச்சமென நினைத்து
சேவையாற்றி உள்ளனர்.
இதனால்
பல மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது வேதனை
அளிக்கிறது. அவர்களின் ஈடுசெய்ய
முடியாத தியாகத்தை உணர்ந்த
இந்த அரசு அவர்களின்
குடும்பத்தாருக்கு ஆறுதல்
அளிக்கும் விதமாக, தொற்று
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை
அளித்து உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா
ரூ.25 லட்சம் வழங்க
முடிவு செய்துள்ளது.
அரசு
மருத்துவமனைகளில் இரவும்,
பகலும் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், ஆய்வுக்கூடப் பணியாளர்கள், சி.டி. ஸ்கேன்
பணியாளர்கள், அவசர மருத்துவ
ஊர்திப் பணியாளர்கள் உள்ளிட்ட
அனைத்துப் பணியாளர்களுக்கும் மற்றும்
அலுவலர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
ஏப்ரல்,
மே, ஜூன் – மூன்று
மாத காலத்திற்கு, மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும்,
செவிலியர்களுக்கு 20 ஆயிரம்
ரூபாயும், இதரப் பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், பட்ட
மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும்
பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரம்
ரூபாயும் ஊக்கத் தொகையாக
வழங்கப்படும் என்று
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.