இந்திய விமானப்படையில் சேருவதற்கான தேர்வில் பங்கேற்க இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படையால் நடத்தப்படவுள்ள அக்னி வீர் வாயு தேர்வில் கலந்து கொள்ள மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
இந்திய விமானப் படையால் நடத்தப்படவுள்ள அக்னி வீர் வாயு தேர்வில் கலந்து கொள்வதற்கு ஆன்லைன் மூலம் ஆக.17ம் தேதிக்குள் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வில் கலந்து கொள்பவர்கள் பிளஸ் 2 மற்றும் பட்டயப்படிப்பு, டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும். மேலும், 27.06.2003 மற்றும் 27.12.2006 ஆகிய தேதிகளுக்குள் பிறந்த திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் இத்தேர்வில் பங்கு பெறலாம்.
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு முகாமில் நடைபெறும் உடற்தகுதித் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். எனவே, இத்தேர்விற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் முறையாக விண்ணப்பித்து தேர்வில் பங்கேற்று பயன்பெறலாம்.
இதுகுறித்த கூடுதல் விபரங்களை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


