இந்திய விமானப் படையின் ‘அக்னிவீா் வாயு’ தேர்வுக்கு ஆக.17-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய விமானப் படையின் ‘அக்னிவீா் வாயு’ திட்டத்தின் கீழ் ஆட்சோப்பு தேர்வுக்கு ஆக.17-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
27.06.2003 முதல் 27.12.2006 வரை பிறந்த திருமணமாகாத இந்திய ஆண், பெண் விண்ணப்பதாரா்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள். இந்தத் தேர்வுக்கு 12-ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தப்பட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டா் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி மற்றும் இன்பா்மேஷன் டெக்னாலஜி ஆகிய மூன்றாண்டு டிப்ளமோ படிப்புகளில் மொத்தம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். ஆா்வமுள்ள இளைஞா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 0416 – 2290042 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


