நவ., 14ல்
மாணவர்களுக்கு பேச்சு
போட்டி
தமிழ்
வளர்ச்சி துறை சார்பில்
நேரு பிறந்த நாளை
முன்னிட்டு வரும் 14ம்
தேதி ஈரோடு மாவட்ட
படிக்கும் பள்ளி, கல்லூரி
மணவ, மாணவியருக்கு பேச்சு
போட்டி நடக்கவுள்ளது.
பள்ளி
போட்டி காலை 10 மணி
முதலும், கல்லூரி போட்டி
மதியம், 3 மணி முதல்
ஈரோடு கலெக்டர் அலுவலகம்,
2ம் தளத்தில் நடக்க
உள்ளது. பள்ளி, கல்லூரி
முதல்வர், தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பம் பெற்று, அவர்களது
ஒப்பம் பெற்று போட்டி
நாளன்று, தமிழ் வளர்ச்சி
துறை துணை இயக்குனரிடம் நேரில் அளிக்க வேண்டும்.
ஒரு பள்ளி, கல்லூரியில் இருந்து இரு மாணவர்களுக்கு அனுமதி. போட்டிக்கு முன்னதாகத்தான், மாணவர்களுக்கு போட்டி
தலைப்பு தெரிவிக்கப்படும்.
முதல்
மூன்று இடங்களை பெறுவோருக்கு தலா, 5,000 ரூபாய், 3,000 ரூபாய்,
2,000 ரூபாய் மற்றும் அரசு
பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்பு பரிசாக தலா,
2,000 ரூபாய் வழங்கப்படும்.