HomeBlogTNPSC.யின் 4 தேர்வுக்கான ரிசல்ட் வெளியீடு

TNPSC.யின் 4 தேர்வுக்கான ரிசல்ட் வெளியீடு

TNPSC.யின்
4
தேர்வுக்கான ரிசல்ட் வெளியீடு

தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா நேற்று
வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு தடய அறிவியல்
சார்நிலை பணிகளில் அடங்கிய
இளநிலை அறிவியல் அலுவலர்
பதவியில் காலியாக உள்ள
72
பணியிடங்களுக்கான எழுத்து
தேர்வு 24.8.2019 அன்று
நடைபெற்றது. இத்தேர்வில் 8851 பேர்
கலந்து கொண்டனர்.

இதில்
21
பேர் நேர்முகதேர்வுக்கு தேர்வுக்கு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு வருகிற
15
ம் தேதி நடைபெறும்.
தமிழ்நாடு பொதுப்பணியில் அடங்கிய
2
ம் நிலை அரசு
உதவி வழக்கு நடத்துனர்
பதவி 50 இடங்களுக்கு கடந்த
நவம்பர் 6ம் தேதி
எழுத்து தேர்வு நடந்தது.

💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

4047 பேர்
தேர்வு எழுதினர். இதில்,
முதன்மை தேர்வுக்கு 570 பேர்
தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்
தங்களுடைய சான்றிதழ்களை தேர்வாணைய
இணைய தளத்தில் அரசு
இசேவை மையங்கள் மூலமாக
வருகிற 3ம் தேதி
முதல் 11ம் தேதி
வரை பதிவேற்றம் செய்ய
வேண்டும். இவர்களுக்கான முதன்மை
தேர்வு வருகிற மே
6
மற்றும் 7ம் தேதி
நடைபெறும். தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி முதல்வர்,
உதவி இயக்குனர் பதவியில்
6
காலி பணியிடங்களுக்கு கடந்த
7.11.21
அன்று எழுத்து தேர்வு
நடந்தது. இதில் 1514 பேர்
பங்கேற்றனர். இதில் 50 பேர்
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒருங்கிணைந்த நிலவியல் சார்நிலை பணிகளில்
அடங்கிய பதவியில் 26 பணியிடங்களுக்கு கடந்த 20.11.21 மற்றும்
21.11.21
அன்று எழுத்து தேர்வு
நடந்தது. இதில் இளங்கலையில் 1217 பேர், முதுகலையில் 962 பேர் தேர்வு எழுதினர்.
இதில் 60 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்தேர்வுகளில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் மதிப்பெண், இடஒதுக்கீடு மற்றும் அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முக தேர்வு, முதன்மை
தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின்
பதிவெண்கள் கொண்ட பட்டியல்
தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in ல்
வெளியிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular