மாற்றுத்திறனாளிகளுக்கு பொது
தேர்வில் சலுகை
பொது
தேர்வுகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை
பெறுவதற்கான விண்ணப்பங்களை, உரிய
காலத்தில் சமர்ப்பிக்க தேர்வு
துறை உத்தரவிட்டுள்ளது.முதன்மை
கல்வி அலுவலர்களுக்கு, அரசு
தேர்வு துறை இயக்குனர்
சேதுராம வர்மா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு பொது
தேர்வுகளை எழுதும், ஆறு
வகை யான மாற்று
திறனாளிகளுக்கு, குறைகளின்றி தேர்வு எழுதி மதிப்பெண்
பெற, குறிப்பிட்ட சலுகைகள்
வழங்க அரசு அனுமதி
அளித்துள்ளது.
பார்வை
திறனற்றோர், காது கேளாத,
வாய் பேச இயலாதோர்,
விபத்தால் ஊனமுற்று பாதிக்கப்பட்டோர், மனநலம் குன்றியோர், டிஸ்லெக்சியா மற்றும்
நரம்பியல் குறைபாடுள்ளோருக்கு இந்த
சலுகைகள் வழங்கப்படும்.இந்த
சலுகை பெற விரும்புவோர் உரிய வழிமுறைப்படி, மருத்துவ
குழு பரிந்துரை கடிதம்
பெற்று, உரிய சான்றிதழ்களுடன், மாவட்ட அரசு தேர்வு
இயக்குனரகத்தில் ஒப்படைக்க
வேண்டும்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
விபரங்களை,
www.dge.tn.gov.in என்ற
இணையதளத்தில் தெரிந்து
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

