Tuesday, August 12, 2025
HomeBlogரேஷன் கடைகளில் காலியாக உள்ள 3,803 பணியிடங்களை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலம் நிரப்ப நடவடிக்கை

ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 3,803 பணியிடங்களை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலம் நிரப்ப நடவடிக்கை

ரேஷன் கடைகளில்
காலியாக உள்ள 3,803 பணியிடங்களை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்
மூலம் நிரப்ப நடவடிக்கை

கூட்டுறவு
சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சென்னை மண்டல கூடுதல்
பதிவாளர் மற்றும் அனைத்து
மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்
கட்டுப்பாட்டில் 23,502 முழுநேர
நியாயவிலை கடைகளும், 9639 பகுதிநேர
நியாயவிலை கடைகள் என
மொத்தம் 33,141 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நியாயவிலை
கடைகளில் 31.12.2021 தேதியில்
3,176
விற்பனையாளர், 627 கட்டுநர்
பணியிடங்கள் காலியாக உள்ளன.  மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுத்து காலி
பணியிடங்களை நிரப்புவதற்கு தனியே
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது
3,836
விற்பனையாளர்கள் தலா
ஒரு நியாயவிலை கடையினை
கூடுதலாக நிர்வகித்து வருகின்றனர். 1,128 விற்பனையாளர்கள் தலா
2
நியாயவிலை கடைகளையும், 222 விற்பனையாளர்கள் 3 கடைகளையும், 4 நியாயவிலை கடை,
15
விற்பனையாளர்கள் தலா
5
நியாயவிலை கடைகள் மற்றும்
அதற்கு கூடுதலாக கடைகளை
நிர்வகித்து வருகின்றனர். ஒரு
தாய்க்கடையுடன் இணைக்கப்பட்டுள்ள பகுதிநேர கடைகளை
கவனித்து கொள்வது கூடுதல்
பொறுப்பின் கீழ் வராது.
ஆயினும், ஒரே பணியாளர்
இரண்டுக்கு மேற்பட்ட முழுநேர
நியாயவிலை கடைகளை பொறுப்பேற்று செயல்படுத்தி வருவது
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொதுவிநியோக திட்ட பணிகளை திறமையாக
செயல்படுத்துவதற்கு இடையூறாக
அமையும்.

எனவே
முழுநேர நியாயவிலை கடையின்
விற்பனையாளர் கூடுதலாக
ஒரே ஒரு முழுநேர
நியாயவிலை கடையின் பொறுப்பினை மட்டும் வகித்து வருவதை
இணைபதிவாளர்கள் உறுதி
செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு
அவர் கூறியுள்ளார். இதுகுறித்து நியாயவிலை கடை பணியாளர்கள் கூறும்போது, தங்களின் பணி
சுமையை குறைக்க ஒரு
நியாயவிலை கடைக்கு ஒரு
விற்பனையாளர், ஒரு
கட்டுநர் என்ற வகையில்
ஆட்களை நியமிக்க வேண்டும்.
நியாயவிலை கடைகளில் காலியாக
உள்ள பணியிடங்களை விரைவாக
நிரப்ப வேண்டும் என்றும்
கோரிக்கை வைத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments