HomeBlogவிவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வேளாண் இயந்திரங்கள்

விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வேளாண் இயந்திரங்கள்

விவசாயிகளுக்கு குறைந்த
வாடகைக்கு வேளாண் இயந்திரங்கள்

விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்
பொறியியல் துறை மூலம்
8
உழுவை இயந்திரங்கள், 2 மண்
தள்ளும் இயந்திரங்கள், 2 ஜேசிபி
இயந்திரங்கள், ஒரு
பொக்லைன் இயந்திரம், ஒரு
தேங்காய் பறிக்கும் இயந்திரம்
குறைந்த வாடகையில் விடப்படுகிறது.

உழுவை
இயந்திம் மணிக்கு ரூ.400,
மண் தள்ளும் இயந்திரம்
மணிக்குரூ.970, ஜேசிபி இயந்திரம்
மணிக்கு ரூ.760, பொக்லைன்
இயந்திரம் மணிக்கு ரூ.1,660,
தேங்காய் பறிக்கும் இயந்திரம்
மணிக்கு ரூ.650 க்கு
எரிபொருள், ஓட்டுநர் செலவுகள்
உள்பட வாடக்கைக்கு வழங்கப்படுகிறது.

மேலும்
உழுவை இயந்திரங்களில் இணைப்பு
கருவிகளாக 2 சட்டி கலப்பை,
5
கொலுக்கலப்பை, 9 கொலுக்கலப்பை, சுழல் கொத்து கலப்பை,
சோளத்தட்டை அறுவடை கருவி,
நேரடி விதை விதைக்கும் கருவி, தென்னை தோகைகளை
துகளாக்கும் கருவி, வாய்க்கால் வெட்டும் கருவி, வைக்கோல்
வாரி, வைக்கோல் கட்டும்
இயந்திரம் என புதிய
தொழில் கருவிகள், டிராக்டருடன் சேர்த்து மணிக்கு ரூ.400
என்ற குறைந்த வாடகைக்கு
வழங்கப்படுகிறது.

விவசாயிகள் உழவன் செயலி மற்றும்
வாடகை செயலியை
பயன்படுத்தி தேவையான இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான வாடகையை
முன்பணமாக செலுத்தி அதிகபட்சம் 20 மணி நேரத்திற்கு வங்கி
அட்டை பரிவர்த்தனை மூலம்
செலுத்தி பயன்பெறலாம். சிறுபாசன
திட்டத்தில் ஒரு பணியிடத்தில் ரூ.500 செலுத்தி குறைந்த
வாடகையில் விவசாயிகளுக்கு நிலத்தடி
நீர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. விருதுநகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டார
விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் பொறியியல் துறை
உதவி செயற்பொறியாளரை அணுகலாம்.

திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர்
விவசாயிகள் திருவில்லிபுத்தூர் வேளாண்
பொறியியல் துறை உதவி
செயற்பொறியாளரை தொடர்பு
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular