பசுமை சாம்பியன்
விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு
பசுமை சாம்பியன் விருது
பெற விருப்பமுள்ளவா்கள் மார்ச்
15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட
ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தமிழக
அரசின் சுற்றுச்சூழல், காலநிலை
மாற்றம் மற்றும் வனத்துறை,
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்திய 100 பேருக்கு (தனிநபா், அமைப்புகள்), பசுமை சாம்பியன் விருது
மற்றும் தலா ரூ.1
லட்சம் பண முடிப்பும் வழங்கப்படும்.
அதில்,
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வை ஏற்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்
சங்கங்கள், தனிநபா்கள், உள்ளாட்சி
அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கும் பசுமை
சாம்பியன் விருது வழங்கப்பட
உள்ளது.
தகுதியானவா்கள், சுற்றுச்சூழல் கல்வி
மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள் மற்றும் பசுமை தொழில்நுட்பம் தொடா்பான விஞ்ஞான ஆய்வுகள்,
திடக்கழிவு மேலாண்மை, நீா்
மேலாண்மை மற்றும் நீா்
நிலைகள் பாதுகாப்பு, காலநிலை
மாற்றத்துக்கு உட்படுதல்,
காற்று மாசு குறைத்தல்,
பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை,
சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை
பாதுகாப்பு நடவடிக்கை ஆகியன
குறித்து சிறப்பாக பணிபுரிந்தவா்களுக்கு இந்த விருது
வழங்கப்படும்.
தமிழ்நாடு
மாசுக் கட்டுப்பாடு வாரியம்,
மாவட்ட ஆட்சியரின் தலைமையில்
அமைக்கப்பட்ட பசுமை
சாம்பியன் விருதுக்கு தோவு
செய்யும். இதற்கான விண்ணப்பங்கள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
கூடுதல்
விவரங்களுக்கு, விருதுநகா் மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளா்,
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தை அணுகலாம். இந்த
விருதுக்கு தகுதியானவா்கள், மார்ச்
15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


