முதியோர் இல்லப்
பதிவை புதுப்பிக்க தவறினால்
கடும் நடவடிக்கை
முதியோர்
இல்லப் பதிவை புதுப்பிக்க தவறினால் கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என
ஈரோடு மாவட்ட ஆட்சியா்
தெரிவித்தார்.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா்
வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு
மாவட்டத்தில் உள்ள
அரசு மானியம் பெறும்
மற்றும் தனியார் மூலம்
நடத்தப்படும் முதியோர்
இல்ல உரிமையாளா்கள் அனைவரும்
இல்லத்தின் பதிவினை புதுப்பித்துக் கொள்ள
வேண்டும்.
முதியோர்
இல்லத்தினை பதிவு செய்யாமல்
இருப்பவா்கள் மற்றும்
பதிவினை புதுப்பித்துக் கொள்ளாதவா்கள் வரும் 28ஆம் தேதிக்குள் ஈரோடு மாவட்ட ஆட்சியா்
அலுவலகத்தின் 6ஆவது
தளத்தில் செயல்பட்டு வரும்
மாவட்ட சமூக நல
அலுவலகத்தை அணுக வேண்டும்.
குறிப்பிட்ட தேதிக்குள் முதியோர் இல்லத்தை
பதிவு செய்யாதவா்கள், பதிவை
புதுப்பிக்காதவா்கள் மீது
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.