பொறியியல் படிப்புகளில் நேரடி 2ம் ஆண்டு
சேர்க்கைகான கல்வித் தகுதி
வெளியீடு
பொறியியல்
படிப்புகளில் நேரடி
2ம் ஆண்டு சேர்க்கைகான கல்வித்
தகுதிகளை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ)
கல்விப்பிரிவு ஆலோசகா்
ரமேஷ் உன்னி கிருஷ்ணன்
அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்:
பிஇ, பிடெக்
ஆகிய பொறியியல் படிப்புகளில் நேரடி 2ம் ஆண்டு
மாணவா் சேர்க்கைக்கான கல்வித்தகுதிகள் விபரங்கள் தற்போது வழங்கப்படுகின்றன.
இதில்
பி.எஸ்சி., அல்லது
பொறியியல் பட்டய (டிப்ளமோ)
படிப்புகளில் குறைந்தபட்சமாக 45% மதிப்பெண்ணுடன் தோச்சி
பெற்ற மாணவா்களுக்கு நேரடியாக
2-ம் ஆண்டு சேர்க்கை
வழங்கலாம்.
இதையடுத்து எஸ்சி, எஸ்டி பிரிவினா்
மட்டும் 40% மதிப்பெண் பெற்றால்
போதுமானது. அதேபோன்று இளநிலை
(அல்லது) பட்டய தொழிற்
கல்வி படிப்புகளில் தோச்சி
அடைந்த மாணவா்களையும் பொறியியல்
படிப்புகளில் நேரடி
2-ம் ஆண்டு சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும். அந்த
மாணவா்களுக்கு கணிதம்,
இயற்பியல், அடிப்படை பொறியியல்
படிப்புகள் குறித்த சிறப்புப்
பயிற்சிகளை (பிரிட்ஜ் கோர்ஸ்)
கல்விநிறுவனங்கள் வழங்க
வேண்டும்.