தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் சிறு
தானியம் பொரிக்கும் இயந்திரம்
தொழில்
முனைவோருக்கு உதவும்
வகையில் சிறு தானியம்
பொரிக்கும் இயந்திரத்தை, வேளாண்
பொறியியல் மத்திய நிறுவனம்
அறிமுகம் செய்துள்ளது.மத்திய
வேளாண் பொறியியல் நிறுவனத்தின், கோவை மண்டல மையம்
பல்வேறு வேளாண் இயந்திரங்களை அறிமுகம் செய்து வருகிறது.
அந்த
வகையில், தொழில் முனைவோருக்கு உதவும் நோக்கத்துடன் புதிய
கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளனர்.
சிறு
தானியங்களை பொரிக்கும் இந்த
இயந்திரம், ஒரு முனை
மற்றும் மும்முனை மின்சார
உதவியுடன் செயல்படக்கூடியது.அனைத்து
வகை சிறு தானியங்களையும் பொரிக்கும் திறன் கொண்டது.
இதைப் பயன்படுத்தி சோளம்,
கம்பு, திணை, சாமை,
வரகு, பனி வரகு,
குதிரைவாலி மற்றும் கேழ்வரகு
ஆகிய சிறுதானியங்களை பொரிக்கலாம்.
இது
குறித்து, வேளாண் பொறியியல்
மத்திய நிறுவனத்தின் மண்டல
மைய தலைவரும், முதன்மை
விஞ்ஞானியுமான பாலசுப்பிரமணியன் கூறியதாவது:அனைவரும்
விரும்பி உண்ணும் வகையில்,
சுகாதாரமான மற்றும் சத்தான
சிறுதானிய பொரியை இந்த
இயந்திரம் உற்பத்தி செய்கிறது.
ஒரு
மணி நேரத்தில் 2 கிலோ
வரை உற்பத்தி செய்யும்
திறன் கொண்டதாக, இந்த
இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த
தொழில்நுட்பம், மகளிர்
தொழில் முனைவோருக்கு மிகுந்த
பயன் தரக்கூடியது.
இந்த
இயந்திரத்தின் பயன்பாடு
மற்றும் பயிற்சி பற்றி
அறிய விரும்பும் விவசாயிகள், 86810 17811 என்ற எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


