இ – நாம்
திட்டத்தில் விவசாயிகள் இடைத்தரகர் இன்றி விற்கலாம்
மதுரை,
உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை
கூடங்களில் தேசிய மின்னணு
சந்தை திட்டம் (இ–நாம்)
மூலம் விவசாயிகள் விளைபொருட்களை இடைத்தரகர் இன்றி விற்பனை
செய்யலாம் என மதுரை
விற்பனை குழு செயலாளர்
மெர்ஸி ஜெயராணி தெரிவித்துள்ளார்.விற்பனைக்குழு உரிமம்
பெற்ற வணிகர்கள், தோட்டக்கலை அலுவலர்கள், வேளாண் வணிக
அலுவலர்களுக்கு மின்னணு
பரிவர்த்தனை தொடர்பான மேம்பாட்டு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த ஒற்றை சாளர உரிமம்
மூலம் வணிகர்கள் இந்தியா
முழுவதிலும் உள்ள விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை வாங்கலாம்.
அதேபோல விவசாயிகளும் நாடு
முழுவதிலும் உள்ள வணிகர்களிடம் தங்களது பொருட்களை விற்கலாம்.
விவசாயிகளின் விளைபொருட்களை தரப்பரிசோதனை செய்வதற்கு ஒழுங்குமுறை விற்பனை
கூடங்களில் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம்
செய்யப்பட்டுஉள்ளது என்றார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


