ராமநாதபுரம் மருத்துவ
கல்லுாரியில் எய்ம்ஸ்
வகுப்பு துவக்கம்
மதுரை
எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு,
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் ஏப்.,
4 முதல் துவங்க உள்ளது
என மதுரை எய்ம்ஸ்
இயக்குனர் ஹனுமந்தராவ் கூறினார்.
மதுரையில்
எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரி
மருத்துவமனை அமைக்க, பிரதமர்
மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமானப் பணி தற்போது
துவங்கியுள்ளது. இந்நிலையில், எய்ம்ஸ் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ்.,
மாணவர் சேர்க்கை 2022 – 2023க்கு
அறிவிக்கப்பட்டது.
மதுரை
எய்ம்ஸ் மாணவர்கள் 50 பேருக்கான
முதலாம் ஆண்டு வகுப்பு,
புதிதாக கட்டப்பட்டுள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு முதலாம்
ஆண்டு வகுப்பு ஏப்.,
4ல் துவங்குகிறது.
மதுரை எய்ம்ஸ் இயக்குனர் ஹனுமந்தராவ் கூறியதாவது:
இதுவரை
24 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிறைவடைந்துள்ளது.
ஏப்.,
4ல் வகுப்புகள் துவங்கும்.
அடுத்த கவுன்சிலிங் மார்ச்
28 முதல் நடக்கிறது.அனாடமி,
பயோ கெமிஸ்ட்ரி, கம்யூனிட்டி மெடிசன் உள்ளிட்ட பிரிவுகளில் 8 பேராசிரியர்கள் தேர்வு
செய்யப்பட்டுள்ளனர். மேலும்,
மங்களகிரி எய்ம்ஸ் பேராசிரியர்கள் ஓரிரு வாரங்களில் வர
உள்ளனர். எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரிக்கு மொத்தம் 183 பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தேர்வு அறிவிப்பு சில
தினங்களில் வெளியிடப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


