ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால
அவகாசம் நீட்டிப்பு
ஜேஇஇ
நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல்
5ம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐஐடி,
என்ஐடி, ஐஐஐடி போன்ற
மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர
ஜேஇஇ எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி
பெற வேண்டும். இவை
முதல்நிலைத் தேர்வு, பிரதானத்
தேர்வு என 2 கட்டங்களாக தேசிய தேர்வு முகமை
சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இதில்
முதல்நிலை தேர்வு ஆண்டுக்கு
4 முறை நடைபெற்று வந்த
நிலையில், 2022-2023ம்
கல்வியாண்டில் இருந்து
2 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட
உள்ளதாக தேசிய தேர்வு
முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி
முதல்கட்ட தேர்வு ஏப்ரல்
21 முதல் மே 4ம்
தேதி வரையும், 2ம்
கட்ட தேர்வு மே
24 முதல் 29ம் தேதி
வரையும் நடைபெற உள்ளது.
இதில் முதல்கட்ட தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த
மார்ச் 31ம் தேதியுடன்
முடிவுற்ற நிலையில், விண்ணப்பிக்கும் அவகாசம் தற்போது ஏப்ரல்
5ம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த
வாய்ப்பை பயன்படுத்தி இதுவரை
விண்ணப்பிக்காத மாணவர்கள்
https://jeemain.nta.nic.in/ என்ற
இணையதள வழியாக JEE தேர்வுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.