தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 25 அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில் இந்த கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் மூன்று ஆண்டு எல்எல்பி சட்டப் படிப்புகளுக்கு 2290 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இணைய வழியில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 17ஆம் தேதி தொடங்கியது.
இதற்கான கடைசி தேதி ஏற்கனவே ஒருமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்டு 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள மாணவர்கள் www.tndalu.ac.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும் கலந்தாய்வுக்கான தேதிகள் மற்றும் விண்ணப்ப கட்டணம் போன்ற விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


