இன்னும் ஓய்வூதியம் பெறாதவர்கள் விபரம் அனுப்பி
வைக்கலாம்
கோவை:
பணி ஓய்வு பெற்ற
பிறகும் ஓய்வூதியம் கிடைக்கப்
பெறாதவர்கள், அது பற்றிய
விபரத்தை மனுவாக அனுப்பி
வைக்கலாம் என்று மாவட்ட
கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கோவை
மாவட்டத்தில் ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம்,
மே, 13ம் தேதி
காலை, 10.30 மணிக்கு கலெக்டர்
அலுவலகத்தில் நடக்கிறது.
இதையொட்டி, பணி ஓய்வு
பெற்ற பிறகும், ஓய்வூதியம் கிடைக்கப் பெறாதவர்களிடம் இருந்து,
மனுக்கள் பெறப்படுகின்றன.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
அரசு,
அரசு சார்ந்த துறைகளில்
பணிபுரிந்து ஓய்வு பெற்ற
அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வூதியம், இதர பலன்கள்
இதுவரை கிடைக்காமல் இருந்தால்,
அதைப்பற்றிய விபரங்கள் இருந்தால்
மனு கொடுக்கலாம்.
மனுவை
இரட்டை பிரதிகளில் மே,
5ம் தேதிக்குள் கிடைக்கும்படியாக, நேரிலோ அல்லது
அஞ்சல் மூலமாகவோ அனுப்பி
வைக்கலாம்.பெயர் மற்றும்
முகவரி, பி.பி.ஓ.,
எண், ஓய்வு பெற்ற
நாள், கடைசியாக வகித்த
பதவி மற்றும் துறை,
குறைகள் (தனி தாளில்),
முந்தைய தகவல் இருந்தால்
விபரம், வழக்கு இருந்தால்
அதன் விவரம், குறைகளை
நிவர்த்தி செய்ய வேண்டிய
அலுவலர் விபரம் ஆகியவற்றுடன் மனு அனுப்ப வேண்டும்.
மே,
13ல் நடக்கும் ஓய்வூதிய
குறைதீர்ப்பு கூட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு
அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து
கொண்டு பயன்பெறலாம் என.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


