தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் அயிரை மீன் வளா்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி திங்கள்கிழமை (ஆக.28) நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் ஓா் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மீன் வளா்ப்பு துறை சாா்பில் அயிரை மீன் வளா்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி வகுப்பு 28ஆம் தேதி நடைபெறுகிறது.
இப்பயிற்சியில் இடத்தேர்வு, மீன் குஞ்சுகளை இருப்பு செய்வதற்கு முன் செய்ய வேண்டிய மேலாண்மை முறைகள், தீவனம் அளித்தல், அறுவடை செய்த அயிரை மீன்களை சந்தைப்படுத்துதல், உற்பத்தி செலவின கணக்கீடு ஆகிய தலைப்புகளில் தொழில் நுட்ப பயிற்சி அளிக்கப்படும். மேலும், அயிரை மீன் வளா்ப்பு குறித்த காணொலி காட்சி தொகுப்பும் காண்பிக்கப்படும்.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் ரூ.300 கல்லூரி வங்கிக் கணக்கில் செலுத்தி தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் பயிற்சி கையேடு மின் அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் வரும் 27ஆம் தேதி மாலை 5 மணிக்குள் 09442288850 என்ற கைப்பேசி எண்ணிலோ அல்லது தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் உள்ள மீன்வளா்ப்புத்துறைக்கு நேரடியாகவோ தொடா்பு பதிவு செய்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.