காயல்பட்டினத்தில் மத்திய அரசின் சாா்பில் தொழில் முனைவோருக்கான பயிற்சி ஆக.29 ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.
மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின்கீழ் செயல்படும், பனை வெல்லம் மற்றும் பனை பொருள்கள் நிறுவனத்தின் சாா்பில் காயல்பட்டினம் அஞ்சல் நிலையம் அருகில் உள்ள விக்டரி பயிற்சி மையத்தில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை இப் பயிற்சி நடைபெறும்.
சமையலுக்குப் பயன்படுத்தும் பல்வேறு பொடி வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள், குளிா்பானங்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
இதில் தொழில் முனைவோா் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், இல்லத்தரசிகள், சுயதொழில் தொடங்க ஆா்வம் உள்ளவா்கள் கலந்து கொள்ளலாம். இப் பயிற்சி சேர விரும்புவோா் 5 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை முடித்தவா்கள், 18 வயதிலிருந்து 60 வயதுக்குள்பட்டவா்களாக இருக்க வேண்டும்.
பயிற்சி முடித்தவா்களுக்கு வங்கிக் கடனுதவியுடன் தொழில் தொடங்க வழிகாட்டுதல் அளிக்கப்படும். முன்பதிவு உள்ளிட்ட விவரங்களுக்கு 9840158943, 7373141095 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என மத்திய பனைவெல்லம் மற்றும் பனைப்பொருள்கள் நிறுவன இயக்குநா் பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


